districts

img

பால் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்ங கொண்டம் அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தின் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்தி தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இடைக்கட்டு அன்ப ழகன், பழனிவேல், ஆனந்தன், கண்ணன், உட்கோட்டை செல்வம் பாலாஜி, கொக்கரனை வினோதினி, தொட்டி குளம் மோகன் உள்ளிட்ட பலர் முன்னி லை வகித்தனர்.  தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலா ளர் வெங்கடாசலம், காங்கிரஸ் ஒன்றியக் குழு உறுப்பினர் நடரா சன், பால் உற்பத்தியாளர் சங்க துணைச் செயலாளர் மகாதேவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மாவதி, மாட்டு வண்டி சங்க மாவட்டத் தலைவர் பாலமுருகன், கோபி மற்றும் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தில்லை  நடராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 ஆக விலை உயர்த்தி வழங்க வேண்டும். பால் அதிக அளவில் கொள்முதல் செய்வதால் கூடுதலாக பால் குளிரூட்டும் நிலையம் 5000 லிட்டர் கொள்ளளவில் அமைக்க வேண்டும், பால் உற்பத்தியாளர்க ளுக்கு கறவை மாடு லோன் வழங்க வேண்டும், தீபாவளியை முன்னிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருச்சி
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலா ளர் ஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். சங்க தலைவர் சீனிவா சன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில், சங்க நிர்வாகி கள் அந்தோணி, திருநாவுக்கரசு, ராஜகோபால் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். தா.பேட்டை ஒன்றியம் ஊரக்கரை ஆவின் பால் சங்கம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராசு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ராமநாதன், மாவட்டக் குழு உறுப்பி னர் சேகர், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் பாண்டியன், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டப் பொரு ளாளர் சுப்ரமணியன் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பாலகுமார், சுதாகர், மரகதம் மற்றும் பால்சங்க உறுப்பினர்கள் 64 கறவை மாடுகளுடன் கலந்துகொண்டனர்.

;