districts

அரியலூரில் இந்திய அளவிலான நெட்பால் போட்டி துவக்கம் 21 மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

அரியலூர், மார்ச் 21 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மீனாட்சி  ராமசாமி கல்லூரி, பாரதி தாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்திய அளவிலான நெட்பால் போட்டி திங்களன்று துவங்கியது.  இந்திய அளவில் 21 மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியானது இன்னும் மூன்று  நாட்கள் நடைபெற உள்ள நிலையில், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், பாரதிதாசன் பல்க லைக்கழகத் துணைவேந்தர் செல்வம், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ கு.சின்னப்பா மற்றும் மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளர் ரகுநாதன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் எஸ்.எஸ். சிவ சங்கரை வரவேற்றனர்.  நான்கு நாட்கள் நடை பெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் 4  அணியுடன் மோத வேண்டி யுள்ளது. நான்கு போட்டியி லும் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஜெய்ப்பூர், பெங்க ளூர் உள்ளிட்ட 21 மாநிலங் களில் இருந்து 50-க்கும் மேற் பட்ட அணிகள் பங்கு பெற்றுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;