districts

கோவிந்தபுத்தூர் ஊராட்சித் தலைவரின் கணவர் அராஜகம்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரியலூர், செப்.27 - அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் இந்திரா. இவர் தலைவராக இருந்தாலும் இவரின் குடும்பத்தாரின் ஆதிக்கமே அதிக  அளவில் உள்ளது. இதனால் ஊராட்சியில்  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.  கோவிந்தபுத்தூர் ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதில், “ஊராட்சியின் தலைவராக இந்திரா  இருந்த நிலையில், அவர் அனைத்து முடிவு களையும் அவரது கணவர் கதிரேசன் மற்றும்  அவரது மகன் தலையீட்டுடன் எடுத்து வரு கிறார். வார்டு உறுப்பினர்களான எங்களிடம்  எவ்வித ஆலோசனையும் மேற்கொள்வ தில்லை. மேலும் எங்களது வார்டு பகுதிக் கான கோரிக்கைகள் மீதும் எந்த நடவடிக் கையும் எடுப்பதில்லை. எந்த பணியும் செய்யாமல், பணி செய்ததாக கணக்கு எழுதி யுள்ளனர். ஊராட்சி கவுன்சிலர் கூட்டம் நடை பெறும் போது, செலவு கணக்கு மட்டுமே காட்டுகிறார்கள். ஆனால் அதற்கான ரசீது களை காட்டுவதில்லை. நடந்து முடிந்த சிறப்பு  கிராம சபை கூட்டத்தில், வார்டு உறுப்பினர் களுக்கோ துணைத் தலைவருக்கோ தகவல்  ஏதும் தராமல் அவர்களுக்கு வேண்டிய நூறு  நாள் வேலை செய்யும் ஆட்களை கொண்டு  கூட்டம் நடத்தினர்.  மேலும் ஒன்றிய அலுவலகம் மூலம் ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிக்காக கொடுக்கப்பட்ட தளவாடப் பொருட்கள் எதை யும் ஊராட்சி அலுவலகத்தில் வைப்ப தில்லை. இதுவரை அதனை நாங்கள் பார்த்த தும் இல்லை. இவ்வாறு பல்வேறு ஊழல்கள்  ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை  நடத்தி ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என கோரி யுள்ளனர்.

;