districts

சிறப்பு தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

அரியலூர், மே 10 - தமிழ்நாடு முதலமைச்சர் நீர்வளத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடி நிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக் கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால் கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை  மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிக்கு ரூ.100 லட்சத்திற்கு  நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் பகுதியில் நீர்வளத்துறை யின் சார்பில் பொன்னார் பிரதான வாய்க்காலின் கிளை  வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தா.பழூர்,  வாழைக்குறிச்சி, இடங்கண்ணி, பாலசுந்தரம், அண்ணகாரன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் தூர்வா ரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்  நேரில் சென்று பார்வையிட்டார்.

;