விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல் குளத்தில் நடைபெறும் 3-ஆம் கட்ட அகழாய்வில் அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைப்பாற்றின் கரையில் வாழ்ந்த முன்னோர்களின் நாகரீகத்தை கண்டறியும் முயற்சியாக விஜயகரிசல் குளம் வைப்பாற்றின் கரையின் 3-ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, இங்கு இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், அதிகமாக சுடுமண் பொம்மைகள், குடுவை, புகைக்கும் குழாய்கள் போன்ற 7500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்த நிலையில், அவை தற்போது மாநில தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்கள், முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.