விருதுநகர், பிப்.28- ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆன்-லைன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கூடுலான அப ராதத் தொகை விதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதிக பாரம் எனக்கூறி சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28 செவ்வாயன்று சிஐடியு சார்பில் சாலைகளில் வாகனங்களை 15 நிமி டங்கள் நிறுத்தி போராட்டம் நடை பெற்றது. சாத்தூரில் நடைபெற்ற போராட் டத்திற்கு சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. விஜயகுமார் தலைமையேற்றார். சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். விருதுநகரில் பாத்திமாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பால சுப்பிரமணியன் தலைமையில் போக்கு வரத்து தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் எம்.வெள்ளைத்துரை கண்டன உரையாற்றினார். சிவகாசியில் போக்குவரத்து தொழி லாளர் சங்க மண்டலத் தலைவர் ஏ. சுந்தர்ராஜ் தலைமையேற்றார்.
மதுரை
மதுரை புறநகரில் 10-க்கும் மேற் பட்ட இடங்களில் போராட்டம் நடை பெற்றது. திருநகரில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.அரவிந்தன் பங்கேற் றார். அலங்காநல்லூரில் கிளைச் செய லாளர் பாலாஜி தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மலை.கண்ணன் ,மாநிலக் குழு உறுப்பினர் சுரேஷ் பங்கேற்றனர். மேலூரில் 4 மையங்களில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அடைக்கன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சமயநல்லூரில் 3 ஆட்டோ நிலை யங்களிலும் அழகர்கோவிலிலும் வேலை நிறுத்த இயக்கம் நடை பெற்றது.
தேனி
கம்பம், தேனி ஆகிய இடங்களில் சிஐடியு ஆட்டோ ,சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் உரி மைக்குரல் தொழிற்சங்கம் சார்பில் வாகன நிறுத்த போராட்டம் நடை பெற்றது. கம்பத்தில் ஆட்டோ சங்க ஏரியா செயலாளர் ஐ பால குருநாதன் தலை மை வகித்தார் .சிஐடியு ஏரியா செயலா ளர் வி.மோகன் துவக்க உரையாற்றி னார் . தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிமை குரல் தொழிற்சங்க செயலா ளர் பாலமுருகன் தலைமை வகித்தார் . ஆட்டோ, சாலைப் போக்குவரத்து சம்மே ளன தேனி மாவட்ட செயலாளர் ஏ.முருக வேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத் தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம் .ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார்.
மதுரை
மதுரை பெத்தானியாபுரம் பகுதி யில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச் செய லாளர் கனகவேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது
சிவகங்கை
. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 5 மையங்களிலும் மானாமதுரையிலும் போராட்டம் நடை பெற்றது. காரைக்குடியில் சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன் தலை மை வகித்தார். மானாமதுரையில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் விஜய குமார் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 19 மையங்களில் நடைபெற்றது. திண்டுக் கல்லில் நாகல்நகரில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன், ஆட்டோ சங்க மாவட்டச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை யிலும், பேகம்பூரில் சிஐடியு பொருளா ளர் தவக்குமார், உமாபதி (மின்சாரம்), பழனி புறவழிச்சாலையில் சாலை போக்குவரத்து சங்க மாவட்டச்செய லாளர் தனசாமி, மாவட்டப் பொருளா ளர் பெருமாள், புனித வளனார் மருத்து வமனை எதிரில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன திண்டுக்கல் மண்டல துணைப்பொதுச்செயலாளர் வெங்கிடுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சின்னாளபட்டியில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பால்ராஜ் தலைமை தாங்கினார். கோபால்பட்டியில் சிஐடியு ஒருங்கி ணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். பழனி பேருந்து நிலையம் அருகே, அரசு மருத்துவமனை அருகே மற்றும் தொப்பம்பட்டியில் போராட்டம் நடை பெற்றது . சிஐடியு கன்வீனர் பிச்சை முத்து தலைமை வகித்தார். காவல் துறையினர் சிஐடியு கன்வீனர் பிச்சை முத்துவை போராட்டம் நடத்தவிடாமல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டுச்சென்று சிறையில் அடைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு பிறகு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர்.