விருதுநகர், பிப்.16- பணி நிரந்தரம் கோரி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வியா ழனன்று விருதுநகரில் உள்ள மேற் பார்வை பொறியாளர் அலுவல கங்கள் முன்பு மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். மின் உற்பத்தி, மின் விநியோ கம், விரிவாக்கப் பணிகள், பொது கட்டுமான வட்டம் ஆகிய பணி களில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரு கின்றனர். எனவே, அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மின் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையை புகுத்தக்கூடாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு கிளைத் தலைவர் சௌந்திரபாண்டியன் தலைமையேற்றார். கிளைச் செய லாளர் வி.சந்திரன் விளக்கிப் பேசி னார். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் எம்.வெள்ளைத்துரை, வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பாலசுப்பிர மணியன், பி.ராமர்,எம்.சாராள் ஆகி யோர் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டனர்.
சிவகங்கை
மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் சிவகங்கை கண்கா ணிப்பு பொறியாளர் அலுவல கம் முன்பு நடந்த மறியல் போரா ட்டத்தில் 200 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்பனர்.மறியல் போராட்டத்தில் மாநிலச்செய லாளர் உமாநாத்,மாவட்டச் செயலாளர் கருணாநிதி,மவட்டப் பொருளாளர் மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இராமநாதபுரம்
சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய சங்கத்தின் சார்பாக ராம நாதபுரம் கண்காணிப்பு பொறி யாளர் அலுவலகம் முன்பாக மத்திய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.குருவேல் கோரிக்கைகளை விளக்கி பேசி ஊர்வலத்தை துவக்கி வைத்தா. ர் அதை தொடர்ந்து திட்ட தலைவர் வி முருகன் தலைமையில் செய லாளர் காசிநாதன் மற்றும் நிர்வாகி கள் ஜெபமணி முருகேசன் ,ஆரோக்கியம், எஸ்.முருகன், எம்.மாலா ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்து கைதாகினர்.
மதுரை
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை, மதுரை மாநகர் மற்றும் ஜி.சி.சி. கிளை கள் சிஐடியு சார்பில் மதுரை கே. புதூர் அருகே உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற் றது. மதுரை மின் திட்ட தலைவர் எஸ். திருமுருகன் தலைமை வகித்தார். மறியலை துவக்கி வைத்து சிஐடியு மாநில செயலா ளர் இரா. தெய்வராஜ் உரையாற்றி னார். சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.அர விந்தன், மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.லெனின் மின்வாரிய பொறியாளர் சங்கம் அமைப்புச் செயலாளர் ஜீவானந்தம், ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். மதுரை கிளை மின்வாரிய திட்டச் செயலா ளர் சி.செல்வராஜ், மாநகர் செயலா ளர் டி. அறிவழகன், ஜி.சி.சி சங்க செயலாளர் (பொறுப்பு) ஜெக நாதன் மற்றும் மதுரை கிளையின் பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோட்ட நிர்வாகிகள் பலர் பேசி னார்கள். மறியலில் ஈடுபட்ட 150க்கு மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.