விருதுநகர், ஜூன் 21- 2007 ஜனவரி 1 முதல் ஊதிய விகி தாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும். நேரடி நியமன ஊழியர் களுக்கு 30 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். பரிவு அடிப்படையில் பணி வழங்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பொது மேலாளர் அலு வலகம் அருகே நடைபெற்ற இப் போராட்டத்திற்கு என்.எப்.டி.இ மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை யேற்றார். துவக்கி வைத்து பிஎஸ்என் எல்இயு மாவட்டச் செயலாளர் குருசாமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி எஸ்என்இஏ சார்பில் அஷரப்தீன், அஜிட்டா மாவட்ட செயலாளர் பாண்டி யராஜன் ஆகியோர் பேசினர். போராட் டத்தை ஆதரித் துஏஐபிடிபிஏ மாநில அமைப்பு செயலாளர் எம்.பெருமாள் சாமி, டிஎன்டிசிடபுள்யூ மாவட்ட செயலா ளர் முத்துச்சாமி ஆகியோர் பேசினர். முடிவில், பிஎஸ்என்எல்இயு மாவட்ட உதவித் தலைவர் ஏ.சமுத்திரக்கனி நிறை வுரையாற்றினார். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.