வேலூர், மார்ச் 27 - வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக் கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட் பாடியில் நகர்ப்புற வாழ் வாதார வேலைவாய்ப்பு திட் டத்தை நீர்வளத்துறை அமை ச்சர் துரைமுருகன் துவங்கி வைத்து பேசுகையில், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத் திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள் ளது. அது குறித்து விசார ணை கமிஷன் அமைக்கப் படும் என்றர். தனி நபர் ஆக்கிர மிப்பில் உள்ள சமுதாய நலக் கூடங்களை மாநக ராட்சி ஆணையர் ஒரு வாரத் திற்குள் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ்நாடு முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆக்கிரமிப்பு களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தற்கா லிக பணிநீக்கம் செய்யப்படு வார்கள் என்று எச்சரித்துள் ளார்.