வேலூர். ஜூலை 24 - மாற்றுத்திறனாளிக ளுக்கு போலி அடையாள அட்டைகள் வழங்கியது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் வேலூர் மாவட்ட 4 வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 24) காட்பாடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், போலி அடை யாள அட்டைகள் பெறு வதில் ஈடுபட்ட இடைத் தரகர்கள், அதற்கு துணை போன அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்க வேண்டும். மாற்றத்திறனாளிக ளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை யும், அரசு மருத்துவமனை களில் மருந்துகள் எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தொழுநோயாளிகளுக்கு மீண்டும் தனி பிரிவுகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாத உதவித் தொகை, 100 நாள் வேலை திட்ட அட்டை, மாதம் ஒரு முறை வருவாய் கோட்டாட்சி யரும், இருமாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியரும் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் பெருந்திரள் இயக்கம் நடத்துவது என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு மாநாட் டிற்கு கே.கோவிந்தராஜ், எஸ்.டி.சங்கரி, ஜோஸ்வா சதீஷ்குமார் தலைமை தாங்கினர். துணை செயலாளர் சுகுமாரும் சங்க கொடியை ஏற்றினார். காட்பாடி ஒன்றியச் செய லாளர் குருமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழுத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். மாநில துணைத் தலை வர் என்.சாந்தி துவக்க வுரையாற்றினர். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோபால.ராசேந்திரனும், வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் கே. வீரபாண்டியனும் சமர்ப்பித்தனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் பேசினார். மாவட்டத் தலைவராக கே.கோவிந்தராஜ், செய லாளராக கே.ஜெ.சீனி வாசன், பொருளாளராக குரு மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.