திருப்பூர், பிப்.4 - திருப்பூர் மாநகராட்சி தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளி யில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வுக் கூட்டம் கடைப்பி டிக்கப்பட்டது. திருப்பூர் புஷ்பா பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள தேவாங்க புரம் பள்ளியில் செவ்வாய் அன்று இந்நிகழ்ச்சி நடைபெற் றது. இதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வட்டாரக் கல்வி அலுவலர் சின்னக்கண்ணு பங்கேற்று விழிப்புணர்வு உரை யாற்றினார். அவர் பேசுகையில், புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் தடுப்பு நடவடிக்கை மற் றும் சிகிச்சையை மேம்படுத்தவும், அதன் தாக்கத்தைக் குறைக்க உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்கவும் உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தவறான உணவுப் பழக்கம், முறையற்ற செல் பகுப்பு மற்றும் பரம்பரை மரபணு மூலமாகவோ புற்றுநோய் ஏற்படுகிறது. புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் குணப்ப டுத்துவது எளிமையானது என்று கூறினார். நாட்டு நல பணித் திட்ட மாணவர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவி கள், புற்றுநோய் வந்தவர்களை ஒதுக்க மாட்டோம், அவர் களை அரவணைத்து பாதுகாப்போம் போன்ற உறுதிமொ ழிகளை எடுத்து, ஊதா வண்ண ரிப்பன் அணிவித்தனர். இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் சரஸ்வதி, சாந்தி, ரேவதி, உமா மகேஸ்வரி, யேசு ஆரோக்கிய ததேயு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல் லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.