districts

img

பழக்கிடங்கில் தீ விபத்து

கோவை, பிப்.4- பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால்,  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெளியேறினர். பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் பழ வகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், செவ் வாயன்று கிடங்கின் பின் பகுதியில் சிறிது அளவில் தீ ஏற் பட்ட நிலையில் அது சிறிது நேரத்தில் பழக்கடை உள்ளே  தீ பற்றி கிடங்கில் உள்ள பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்த மரப்பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது தீ  பற்றி எரிந்தது இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் சம் பவ இடத்திற்கு வந்து, மின்சார இணைப்பை துண்டித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்தின் போது  கிடங்கில் இருந்த பணியாளர்கள் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை ஏற்பட்டதால் அப் பகுயில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  வெளியேறினர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.