districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பணத்தை இழந்த மக்கள் போராட்டம்

பணத்தை இழந்த மக்கள் போராட்டம் சேலம், பிப்.4- சேலம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்தில் பணம் இழந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் களை காவல் துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு சேலம், அம்மாபேட்டை பகுதியில் அன்னை தெரேசா என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. பொதுமக்களிட மிருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், தொண்டு  நிறுவனத்தை நடத்தி வந்த விஜயா பானு, செந்தில், பாஸ்கர், ஜெயப்பிரதா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த னர். மேலும், அவர்களிடமிருந்து பணம், நகை, வெள்ளிப்  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த  நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் செவ் வாயன்று சேலம் கோட்டை மைதானத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நிறுவனத்தில் பணத்தை இழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக புகார் தெரிவிக்க வேண் டும். தொண்டு நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வெள்ளி, தங்கம் ஆகியவைகள் வங்கி லாக் கரில் உள்ளன. உரிய விசாரணை மேற்கொண்டு பொதுமக்க ளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

ஆங்கிலேயர் காலத்து பாலம் சீரமைக்கும் பணி

ஆங்கிலேயர் காலத்து பாலம் சீரமைக்கும் பணி ஈரோடு, பிப்.4- பவானியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை சீரமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், பவானி நகரம் காவிரி மற்றும் பவானி  ஆறு சூழந்த பகுதியாகும். நகரத்திலிருந்து பவானி நதியைக் கடந்தால் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும். அதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இன்றும் பயன் பாட்டில் உள்ளது. இந்த பவானி - காலிங்கராயன்பாளையம் இணைப்பு பாலம் மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இது  கோபி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட பவானி உட்கோட்டத்திற்குட்பட்டதாகும். இதனையறிந்த நகர் மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன் பாலத்தில் பராம ரிப்புப் பணிகள் செய்ய கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து பாலம் பராமரிப்பு பணிகள் செவ்வாயன்று முதல்  நடைபெற்று வருகிறது. இதனை நகர்மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் 8 வருட வழக்கில் 8 நாளில் தீர்வு

நாமக்கல், பிப்.4- எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எட்டு நாட்களுக்குள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணையை முடித்து சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக் கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அளவாய்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவ ரின் மகன்கள் நவீன் குமார் (34), பிர வீன் குமார் (32). இவர்கள் இருவரும் மைனராக இருந்தபோது, ஒவ்வொ ருவருக்கும் ரூ.18 ஆயிரத்தை, கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முருகேசனின் தந்தை கருப் பண கவுண்டர், அளவாய்பட்டி விநா யகர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் 20 ஆண்டுக ளுக்கு டெபாசிட் செய்துள்ளார். டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு 15 சதவிகித வட்டி  கணக்கிட்டு ரூ.3,06,448 ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் வழங்குவதாக கூட் டுறவு சங்கம் டெபாசிட் சான்றிதழை வழங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு கருப்பண கவுண்டர் இறந்துவிட்டார். நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் 18 வயது நிறைவடைந்த நிலையில் டெபாசிட் காலம் முடிவடைந்த பின் னர், கடந்த 2016 ஆம் ஆண்டு கூட்டு றவு சங்கத்தை அணுகி பணத்தை கேட்டுள்ளளனர். ஆனால், 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஏழு சதவிகித வட்டி வழங்க உத்த ரவு இருப்பதால், டெபாசிட் செய்யப் பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஏழு சதவிகித வட்டி மட்டுமே வழங் குவோம் என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு  கூட்டுறவு சங்கம் மீது தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன் றத்தில் கூட்டுறவு சங்கம் ஆஜராகாத தால் ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங் கப்பட்டது. இதனை எதிர்த்து கூட்டு றவு சங்கம் சார்பில், மாநில நுகர் வோர் ஆணையத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் வழக்கு களை கடந்த ஜன.20 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்  கொண்டு மூன்று மாதத்தில் தீர்ப்பு வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உத்தர விட்டு, மாநில நுகர்வோர் ஆணையம் இரண்டு வழக்குகளையும் அனுப்பி வைத்தது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் ஜனவரி 20, 24, 27 ஆகிய மூன்று தினங்களில் சாட்சிகளை விசா ரித்து இருதரப்பு வாதங்களும் கேட் கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ் தலைமையில் ஜன.28 ஆம்  தேதியன்று நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையில் டெபாசிட் சான்றிதழில் உள்ளவாறு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,06,448 வழங்கவும், டெபாசிட் முதிர்ச்சி அடைந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பணம் வழங்கப் படும் நாள் வரை ரூ.3,06,448க்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறு சதவிகித வட்டி வழங்கவும் கூட்டுறவு சங்கம் ஒப்புக்கொண்டது. எட்டு ஆண்டுக ளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில நுகர்வோர் ஆணையம் உத் தரவிட்ட நாளில் இருந்து, எட்டு நாட்க ளுக்குள் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு விசார ணையையும் முடித்து சமரச பேச்சு வார்த்தை மூலம் வழக்கு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது கோவை, பிப்.4- வடமாநில இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாஷ், ராகேஷ், ராஜேஷ் நிசாத், சஞ்சய் ஆகியோர் கோவை மாவட்டம், அன் னூர் அருகே உள்ள மாசாண்டிபாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கிருஷ்ண கவுண்டன் புதூர், கெம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ், லோகேஷ், பூபதி, விஜய், சந்தோஷ் ஆகிய  5 பேர் சேர்ந்து அவர்களை மிரட்டி கையில் இருக்கும் பணத்தை கேட்டுள்ளனர். பணம் இல்லை எனக் கூறியதை தொடர்ந்து,  கத்தியை காட்டி மிரட்டி சுபாஷின் செல்போனை எடுத்து  அவரது ஜிபே எண்ணிலிருந்து 25,000 ரூபாயை கமலேஷின் காதலியின் எண்ணுக்கு மாற்றியுள்ளனர். மேலும், சுபாஷ்,  ராகேஷ், சஞ்ஜய் ஆகியோரிடம் இருந்து 3 செல்போன்களை  பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுபாஷ் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அன்னூர் காவல் ஆய் வாளர் செல்வம் தலைமையிலான காவல் துறையினர் 5 பேரை யும் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற் றும் 25,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் ஆட்சியருக்கு பாராட்டு

நாமக்கல் ஆட்சியருக்கு பாராட்டு நாமக்கல், பிப்.4- பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அள வில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சி யர் ச.உமாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அள வில் நாமக்கல் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ச.உமாவிற்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து, கேடயங்கள் வழங்கினர். இதற்கு பாராட்டு தெரிவித்து, தமிழ் நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நாமக்கல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, மோகனூர், சேலம் சாலைகளில் பாதசாரி களுக்கான நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்ற புகார் தொடர்பாக ஆட்சியர் விசாரித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மனு அளித்த னர்.

மோசடி செய்த ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்: ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர், பிப்.4 - வீட்டுக் கடன் வழங்கிவிட்டு அதற் கான வட்டியையும் மாதத் தவணை  காலத்தையும் அதிகரித்து மோசடி  செய்த தனியார் ஹவுசிங் பைனான்ஸ்  நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.  காலனி இரண்டாவது வீதியை சேர்ந் தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி செல்வி. மகன் கிஷோர் குமார். இவர்கள் கடந்த 2023 ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள அப்டஸ்  வேல்யூட் ஹவுசிங் பைனான்ஸ் என்ற  நிறுவனத்தை அணுகி வீடு கட்ட  கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.  அப்போது வட்டி 9.85 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ. 9 லட்சத்து  18 ஆயிரத்து 191 கடன் தொகை வழங் குவதாகவும், மாதத் தவணையாக ரூ.13,167/- வீதம் 104 மாதங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் கூறியுள் ளனர்.  இதை ஒப்புக்கொண்ட அடிப்ப டையில் கடன் வழங்கப்பட்டது. இந்த  கடனுக்காக 2024 ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி முதலாவது தவ ணைத் தொகையை செலுத்தியுள்ள னர்.  இதன் பிறகு அப்டஸ் ஹவுசிங்  பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, கோவிந்தராஜ் பெற்ற கடனுக்கு வட்டி 15.50 சதவீதம் என்றும், தவணை காலம் 180 மாதங்கள் என் றும் தெரிவித்து உள்ளனர்.  இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  கோவிந்தராஜ், மேற்படி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அதன் கிளை மேலா ளர் பதில் அளிக்கவில்லை. எனவே சென்னையில் உள்ள தலைமை அலு வலகத்தை தொடர்பு கொண்ட போதும் அவர்களும் சரியாக பதில ளிக்கவில்லை.  ஏற்கனவே அவர்கள் ஒப்புக் கொண்டபடி செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகை மொத் தம் 13 லட்சத்து 69 ஆயிரத்து 368 செலுத்துவதற்கு மாறாக, வட்டியை அதிகரித்து தவணை காலத்தையும் கூட்டி உள்ளதால் இதைவிட கூடு தலாக 10 லட்சம் செலுத்த வேண்டும்  என்று கூறப்பட்டதால், மன உளைச் சல் ஏற்படுத்தியதாக கூறி கோவிந் தராஜ் திருப்பூர் மாவட்ட நுகர்வோர்  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த திருப் பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன் றம், மேற்படி ஹவுசிங் பைனான்ஸ்  நிறுவனத்தினர், வர்த்தக நடைமு றைக்கு மாறாக, சட்டவிரோதமான முறையில் செயல்பட்டுள்ளது உறுதி யாகி உள்ளது என்று கூறியுள்ளது. எனவே இந்த வழக்கில் பாதிக்கப் பட்ட கோவிந்தராஜுக்கு ரூ.50 ஆயி ரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  இழப்பீட்டை இரண்டு மாத காலத்திற் குள் செலுத்த தவறினால் கூடுதலாக வட்டியுடன் செலுத்த வேண்டும் என் றும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி உத் தரவிட்டுள்ளார் தொடர். வழக்குத் தொடுத்த கோவிந்தராஜ் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் வை.ஆனந் தன் இத்தகவலை தெரிவித்தார்.

திருப்பூரில் 20 நாட்களுக்கு  4ஆவது திட்ட குடிநீர் வராது

திருப்பூர், பிப். 4 – திருப்பூர் மாநகராட்சியில் பிப்ரவரி 20ஆம் தேதி வரை  மொத்தம் 20 நாட்களுக்கு திருப்பூர் நான்காவது திட்ட குடிநீர்  வராது, எனவே மூன்றாவது திட்டக் குடிநீர் விநியோகம் செய் யப்படுவதை சிக்கனமாக பயன்படுத்தும்படி மாநகராட்சி ஆணையர் சு.ராமமூர்த்தி கேட்டுக் கொண்டிருக்கிறார். பவானி ஆற்றில் நீர்த்தேக்கப் பகுதியில் மின்வாரிய பராம ரிப்பு பணிகள் காரணமாக நான்காவது திட்ட குடிநீர் விநியோ கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.