districts

img

உழைக்கும் பெண்கள், மாதர் சங்க கருத்தரங்கம்

கரூர், மார்ச் 9 - உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு (சிஐடியு), அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் கரூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண் டாடும் வகையில் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர்  என்.சாந்தி தலைமை வகித்தார். கட்டுமான சங்க ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் எம்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலை வர் மு.செல்வராணி சர்வதேச மகளிர் தின மும் பெண்கள் நிலைமையும் என்ற தலைப்பில் பேசினார்.  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் செயலாளர் த.சகிலா புதிய கல்விக் கொள்கையும் பெண்கள் சந்திக்கும்  சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.  மாதர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் சசிகலா நவீன கலாச்சாரமும் பெண்கள் நிலையும் என்ற தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் சுமதி பாலின சமத்துவமும், ஜனநாயகமும் என்ற தலைப்பிலும், புக ளூர் நகராட்சி கவுன்சிலர் அ.இந்துமதி உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் பேசினர்.  சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.