புதுதில்லி, டிச.7- தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க மறுப்பது ஏன் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழ்நாடு கடந்த சில நாட்களாக மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது என்றார். இன்றைக்கும் கூட தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளில் பாதிப்பு களை பார்வையிட்டு ஆய்வு செய்து வரு கிறார். கடந்த 31 நாட்களாக முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றே வெள்ள சேதங்களை பார்த்து முதல்வர் நட வடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக நானும், தயாநிதி மாறனும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து விவாதிக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை கவனத்தில் கொள்வ தில்லை. எப்போதுதான் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள போகிறீர்கள்?” என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இது மிக மிக ஆபத்தான விவகாரம். கடந்த 10 நாட்களாக இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.