திருவாரூர், ஜன.20 - பெருந்தரக்குடி ஊராட்சியை திருவா ரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி நகர்ப்புற பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தரக்குடி ஊராட்சியில் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏழை-எளிய அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள், 100 நாள் வேலைவாய்ப்பை நம்பி இவர்க ளின் வாழ்க்கை இருந்து வருகிறது. தங்களுடைய ஊராட்சியை, திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து தொ டர்ந்து சாலை மறியல் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக திங்களன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெருந்த ரக்குடி ஊராட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1200-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி, மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்பா ளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, பெருந்தரக்குடி கிளைச் செயலாளர் குமரவேல், தங்கராஜ், வி.ச. கிளைச் செயலாளர் ரவி உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.