புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜனனி, அஸ்விதா ஆகியோர் பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். “போர்முனையில் இராணுவத் தளவாடங்களை சுமந்துசெல்லும் தானியங்கி ரோபோ” என்ற இவர்களது கண்டுபிடிப்புக்கு இப்பரிசு கிடைத்துள்ளது.