மயிலாடுதுறை, டிச.18 - “வீரவெண்மணி வரலாறும்-கம்யூ னிஸ்ட்டுகளின் தியாகமும்” என்ற முழக்கத்து டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயி லாடுதுறை மாவட்டக் குழு சார்பில் மாபெ ரும் நடைபயணம் சனிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான சனிக்கிழமை மாலை திரு முல்லைவாசலில் நிறைவடைந்த நடை பயணத்தையொட்டி பொதுக் கூட்டம் நடை பெற்றது. கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன் மற்றும் மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் விளக்க வுரையாற்றினர். முன்னதாக திருமுல்லைவாசல் வந்த டைந்த நடைபயணக் குழுவிற்கு இஸ்லாமிய ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற் பளித்து பயணக் குழு தலைவர் பி.சீனி வாசன் உள்ளிட்டோருக்கு சால்வை அணி வித்து மரியாதை செய்தனர். 2 ஆவது நாளான ஞாயிறன்று சீர்காழி யில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் சிலைகளுக்கு பயணக் குழுவி னர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, துவங்கிய நடைபயணம் புதிய பேருந்து நிலையம், தென்பாதி, சட்டநாத புரம், மருவத்தூர் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலில் பொதுக் கூட்டத்துடன் நிறை வடைந்தது.