districts

img

வெண்மணி தியாகத்தை நினைவு கூர்ந்து... சிபிஎம் நடைபயணத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

மயிலாடுதுறை, டிச.19- “வீரவெண்மணி வரலாறும், கம்யூனிஸ்ட்டுகளின் தியாகமும்” என்ற முழக்கத்தோடு மயிலாடு துறை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடக்கும் நடைபயணத்திற்கு ஒவ் வொரு பகுதிகளிலும் உற்சாக வர வேற்பளிக்கப்படுகிறது.  3 ஆவது நாளான திங்களன்று காலை மயிலாடுதுறை ஒன்றியம், ஆனந்ததாண்டபுரத்தில் மேள  தாளங்களுடன் துவங்கி வேப் பங்குளம், கழுக்கானிமுட்டம், அப்  பங்குளம், மயிலாடுதுறை கிட் டப்பா அங்காடி நகரப்பகுதி, காந்திஜி சாலை, கூறைநாடு, பூக்கடைத்தெரு, மாப்படுகை ரயில்வே கேட், சித்தர்காடு, மூவ லூர், மகதானபுரம், மல்லியம், வானதிராஜபுரம், கோழிக்குத்தி, சோழம்பேட்டை உள்ளிட்ட பகுதி கள் வழியாக சென்ற நடைபயணம் மாப்படுகை அண்ணா சிலை அரு கில் நிறைவடைந்தது. முன்னதாக கூறைநாடு அண்ணாசிலை பகுதி வந்த நடை பயணக் குழுவினருக்கு மார்க்  சிஸ்ட் கட்சி கிளை சார்பில் பட்டா சுகள் வெடித்து வரவேற்பளிக்கப் பட்டது. பின்னர் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்  பகுதியில் உள்ள அம்மன் பக்தர் களும் நீர்மோர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை நடைபயணக் குழுவினருக்கு வழங்கி பாராட்டி னர். ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள் கூடி வந்து நின்று வரவேற்று, தங்களின் அடிப்படை தேவைகளை முறையிட்டனர். இப்பயணத்தில், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மயிலாடுதுறை ஒன்றிய-நகரச் செய லாளர்கள் உரையாற்றினர்.
கே.சாமுவேல்ராஜ் பெருமிதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை மாவட்டக் குழு சார்பில் மாவட்டம் முழுவதும் நடை பயண பிரச்சாரம் டிச.17 முதல்  தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் சீர்காழி ஒன்றி யம் வைத்தீஸ்வரன்கோவில் சன்  னதி வீதியில் கட்சியின் சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மணல் மாஃபியாக்களால் விலை பேசி வாங்க முடியாதவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள். மணல் கொள்ளை தடுக்கப்படும் இடங்களிலெல்லாம் நாங்கள் மட்டும்தான் போராடி தடுத்து வரு கிறோம். தியாகத்தால் நிரம்பி வழி கிற இயக்கம் என்றார்.