districts

திருச்சி முக்கிய செய்திகள்

வருமுன் காப்போம்  திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர், செப்.14 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் ஒதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட சுகா தாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ  முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர்  சேசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒதியம்  ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவ குழுவினர் பொது மருத்துவம் மற்றும் சித்த  மருத்துவ சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கி னர். இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாமில் 300- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன டைந்தனர்.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் செப்.18 உடையார்பாளையத்தில் நடக்கிறது

அரியலூர், செப்.14 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய்  வட்டத்தில் புதன்கிழமை (செப்.18) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சி யர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உடையார்பா ளையம் வருவாய் வட்டத்தில் 18.9.2024 அன்று காலை 9  மணி முதல் 19.9.2024 காலை 9 மணி வரை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில்  பல்வேறு துறைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து  ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன்படி 17.9.2024 வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ‘உங்களைத் தேடி, உங்கள்  ஊரில் திட்டம்’ என்று குறிப்பிட்டு மனுக்களை செந்துறை  வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். 18.9.2024 அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின் போதும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்  என்றார்.

பேராவூரணியில் மக்கள் நீதிமன்றம்: 65 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சாவூர், செப்.14 - பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள்  நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட  உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடு வருமான என்.அழகேசன், வழக்கறிஞர் ஏ.ஆர்.நடராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில், நிலுவையில் உள்ள 135  வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 65 வழக்கு கள் சமரச முறையில் முடிவுற்று, அதற்கு தீர்வு தொகை யாக ரூ.8,62,,600/- வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.