districts

img

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - இந்திய சுதந்திர போராட்டத்திலும், சமுதாய முன்னேற்றத்திலும் தங் களை முழுமையாக அர்ப்ப ணித்து கொண்ட கல்லூரி நிறு வன தந்தையர் ஹாஜி எம். ஜமால்முகமது சாஹிப், ஜனாப் என்.எம்.காஜாமி யான் ராவுத்தர் ஆகியோ ரின் தேசம் மற்றும் கல்வி  தொண்டினை போற்றும் விதமாக திருச்சி ஜமால் முக மது கல்லூரியில் கல்லூரி  நிறுவன நாள் விழா,  கல்வி, சமூக, பொருளாதார  மேம்பாட்டு செயல்பாடுகளு டன் கல்லூரி வரலாற்றை தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா நடைபெற் றது. இதுமட்டுமின்றி, உலக ளாவிய நிலையில் அமைந் துள்ள 19 முன்னாள் மாண வர் சங்க கிளைகள், முன்னாள்-இன்னாள் பேரா சிரியர்கள், கல்லூரி நிர்வாகக் குழு மற்றும் கல்லூரியின் நலன் விரும்பும் ஆர்வலர் கள் ஆகியோர் பங்களிப்பு டன் கல்லூரி வளாகத்தில் உருவாக உள்ள குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிறன்று கல்லூரியின் என்.பி.அப்துல்கபூர் அரங்கில் நடைபெற்றது.  இந்த முப்பெரும் விழா வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு,  குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிடத்திற்கு அடிக் கல் நாட்டி சிறப்புரையாற்றி னார்.  அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். கல்லூரி நிர்வாகக் குழு  செயலாளரும், தாளாளரு மான காஜா நஜிமுதீன், பொரு ளாளர் ஜமால்முகமது ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். முன்னதாக கல்லூரி  முதல்வர் எஸ்.இஸ்மாயில் முகைதீன் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.