districts

திருச்சி, அரியலூர், நாகை முக்கிய செய்திகள்

பாரதிதாசன் பல்கலை. தர தேர்வுகள் ஒத்திவைப்பு 

திருச்சிராப்பள்ளி, ஜன.7-திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜன.8 (சனிக்கிழமை) நடைபெற இருந்த முதுநிலைத் தேர்வுகள் மற்றும் ஜன.9 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த இள நிலை தர தேர்வுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் தெரிவித்துள்ளார்.

 

திருநங்கைகளுக்கு இன்று ஸ்மார்ட் கார்டு  வழங்கும் சிறப்பு முகாம்
அரியலூர், ஜன.7 -அரியலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட்  கார்டு வழங்குவதற்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஜன.8 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சம்பந்தப்பட்ட அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள  வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில்  திருநங்கைகள் மட்டும் கலந்து கொண்டு பொது விநி யோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், குறிப்பாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்பஅட்டை வகை மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தங்கள் தேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி யர் ரமண சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அரியலூர் அருகே  அரசுப் பேருந்து விபத்து:  13 பேர் காயம்
அரியலூர், ஜன.7-அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணி குதிச்சான் கிராமத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிமடம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி, கருக்கை கிரா மங்களுக்கு இடையே பேருந்து வந்து கொண்டிருந்த போது  எதிர்திசையில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி ஓட்டுநர் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்ததாக  கூறப்படுகிறது. இதில் எதிரே வந்த அரசு நகரப் பேருந்து மீது மோதுவது போல், லாரி வேகமாக வந்ததால் சுதாரித்துக் கொண்ட நகரப்  பேருந்து ஓட்டுநர் பிரகாஷ், சாமர்த்தியமாக பேருந்தை இடது பக்கத்தில் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் 13  பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு ம ருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் முதலுதவி  பெற்று வீடு திரும்பினர்.


பாம்பு கடித்து இளம்பெண் பலி
வேதாரண்யம், ஜன.7-நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கா ரன்புலம் ஊராட்சி 3 ஆம் சேத்தி முதலியார் குத்தகை பகுதியை  சேர்ந்தவர் வீரசேகரன். இவருடைய மகள் பிரதீபா (20) நர்சிங்  படித்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் கடை யில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் புதனன்று இரவு  வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு ஆயக்காரன்புலம் பேருந்து நிறுத்தத்தில், பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் கிடந்த  பாம்பு பிரதீபாவை கடித்துள்ளது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேதா ரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பிரதீபா உயி ரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு காவல் ஆய்வாளர் கண்ணிகா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நலவாரிய அட்டை வழங்கல்
பாபநாசம், ஜன.7 -பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ளிக்கடை ஊராட்சியில் மத்திய அரசின் தொழிலாளர் நலவாரிய அட்டை  வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் தொழிலாளர் நல  வாரிய அட்டையை 792 பேருக்கு முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர் ஜெயக்குமார் வழங்கினார். ஒன்றியக் குழு உறுப்பி னர் சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 

பயிர்களை ஆய்வு செய்தவேளாண் மாணவர்கள்
பாபநாசம், ஜன.7 - பாபநாசம் அருகே அம்மாபேட்டை வட்டாரத்தில் கிராமப் புற ஊரக பயிற்சி அனுபவத்தின் கீழ் செங்கிப்பட்டியை அடுத்த உசிலம்பட்டியில் செயல்படும் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், அருந்தவபுரம் கிரா மத்தில் மழை பாதித்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.  மேலும் தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகளுக்கு உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து கொடுத்தனர். இவ்வாறு இலவச மரக்கன்றுகள் பெற முன்பதிவு செய்த  விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாக சென்று அவர்களின்  விண்ணப்பத்தை ஆன்-லைனில் ஒப்புதல் அளிக்கும் பணியும்  மேற்கொண்டனர். அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா,  துணை அலுவலர் மனோகரன், உதவி அலுவலர் சூரிய மூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதல்படி முன்னோடி விவசாயி களின் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வரப்பு உளுந்து,  பறவை இருக்கைகள், கோட்டான் குடில் ஆகியவற்றை பார்த்து தெரிந்து கொண்டனர்.