சிபிஎம் பேரவை
திருச்சிராப்பள்ளி, ஜூன் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு அரசியல், ஸ்தாபன தீர்மானம் விளக்க பேரவைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். அரசியல், ஸ்தாபன தீர்மானத்தை விளக்கி கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பி னர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பகுதி குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், பிராக்சன் உறுப்பினர், மத்தியதர அரங்க, போக்குவரத்து உள்ளிட்ட கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளருமான மறைந்த தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர குழு கட்சி உறுப்பினர் ரசீது வழங்குதல் மற்றும் 23 ஆவது கட்சி காங்கிரஸ் தீர்மான விளக்க பேரவை கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் மனோகரன் சிறப்புரையாற்றினர். மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கட்சி காங்கிரஸ் தீர்மானத்தை விளக்கி பேசினார். கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம் நன்றி கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வலங்கைமான் ஒன்றிய மாநாடு
குடவாசல், ஜூன் 5 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது வலங்கை மான் ஒன்றிய மாநாடு ஆலங்குடி தனியார் திருமண மண்டபத் தில் ஒன்றிய தலைவர் டி.சண்முகம் தலைமையில் நடை பெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். தம்புசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலை வர் எம்.சேகர் மாநாட்டு வாயிலாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறைவுரையாற்றினர். செயலாளராக கே.சுப்ரமணியன், தலைவராக டி.காம ராஜ், பொருளாளராக எஸ்.இராமலிங்கம், துணைத்தலை வராக டி.சண்முகம், துணைச் செயலாளராக ஏ.பார்த்த சாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.ராதா, மாவட்ட குழு உறுப்பி னர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தோழர் வி.உத்திராபதி படத்திறப்பு
மன்னார்குடி, ஜூன் 5- 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி உறுப்பினராக இருந்து கடந்த 25.5.2022 அன்று மறைந்த தோழர் வி.உத்திரா பதியின் படத்திறப்பு நிகழ்ச்சி மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உருவப் படத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஜி.தாயுமான வன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, மூத்த தோழர் பி.சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் பி.ஜெய பால், சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
மாற்றுத்திறனாளிகள் முகாம்
தஞ்சாவூர், ஜூன் 5 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய, கிழக்குத் தொடக்கப் பள்ளியில், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ந.சுவாமிநாதன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளி களுக்கு அடையாள அட்டை, அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். இதில், பொது மருத்துவர், கண் மருத்துவர், முடநீக்கி யல் மருத்துவர், மனநல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள், மாற்றுத் திறனாளிகளை பரிசோ தனை செய்தனர். அதனடிப்படையில் அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினர். முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை 45 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் தேசிய அடையாள அட்டை பெற 102 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சமூக நலத்துறை உதவித்தொகைக்காக 35 விண்ணப்பங்கள், உதவி உப கரணங்கள் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்காக 10 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பேராவூரணியில் நாளை மின்தடை
தஞ்சாவூர், ஜூன் 5 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள் ளார். பேராவூரணி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும், பெருமகளூர், திருவத்தேவன், ஒட்டங்காடு, திருச் சிற்றம்பலம் மற்றும் வாட்டாத்திக்கோட்டை கொல்லைக் காடு ஆகிய மின் பாதைகள், பேராவூரணி நகர், ஆவணம், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல் வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச் சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் மின்தடை ஏற்படும். மேலும், பொதுமக்கள் மின்தடை புகார்களுக்கு 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் மற்றும் மின்னகம் எண் 949879498-ஐ அழைத்து புகார்கள் மற்றும் மின் விபரங் கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி
கும்பகோணம், ஜூன் 5- கும்பகோணம் மாநகராட்சி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் ‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் ஆகியோர், சிறப்பாக குப்பைகளை தரம் பிரித்து சுகாதாரமாக தெருக் களை வைத்திருந்த 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு பரிசு கள் வழங்கி பேரணியை துவக்கி வைத்தனர். கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி பூங்காவை சென்றடைந்தது.