ஜூன் 20 - 25 ஆதார் சிறப்பு திருத்த முகாம்
தஞ்சாவூர், ஜூன் 19- ஆதார் சிறப்பு திருத்த முகாம் ஜூன் 20 (திங்கள்கிழமை) தொடங்கி ஜுன் 25 (சனிக்கிழமை) வரை 6 தினங்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆறு. பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, வேதாரண்யம், தகட்டூர் துணை அஞ்சலகங்களில், ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், புதிய ஆதார் பதிவு, பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி, தொலைபேசி எண் திருத்தம் செய்ய ரூ.50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 19 - திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் பெறுவதற்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், தங்களுடைய சாதனைக்கான ஆவ ணங்களுடன் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங் களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டு அரங்கம், திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.
முதியவர் சடலம் மீட்பு
அரியலூர், ஜூன் 19 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன்(60). இவர் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் தவ மணிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. மகள் தவமணியும் சில வரு டங்களுக்கு முன்பு இறந்து விட்டார். முருகேசனின் மனைவி மற்றும் மகள் இறந்துவிட்டதால், முருகேசன் மரு மகன் கலியமூர்த்தியின் பாதுகாப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் சனிக் கிழமை பேருந்து நிலையத்திற்கு வந்த முருகேசன் மீண்டும் வீடு திரும்ப வில்லை. மாமனார் காணாததைக் கண்டு மருமகன் கலியமூர்த்தி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒருவர் அமர்ந்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் கீழக்குடியிருப்பு கிராமம் நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருமகன் கலியமூர்த்திக்கு தகவல் கொடுத்து முருகேச னின் உடல் சொந்த ஊரான கீழக்குடியிருப்பு கிராமத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்குக! சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை
மயிலாடுதுறை, ஜூன் 19 - மயிலாடுதுறை ஆர்ஓஏ கட்டிடத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.சந்திரா தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் வி.நாக ராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இரா.கமலநாதன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். மாநில துணைத் தலைவர் ச.மதி வாணன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். நிறைவாக மாநில துணைத் தலை வர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் சிறப்பு ரையாற்றினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயித்து அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதி யம் வழங்க வேண்டும். ஜிபிஎப் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஓய்வுபெ றும் நாளில் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் பி.வேம்பு நன்றி கூறினார்.