districts

திருச்சி விரைவு செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம்

தஞ்சாவூர், மே 30-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை 12.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அன்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கார் மூலம் வேளாங்கண்ணி சென்று, அங்கு இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 31 ஆம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் மற்றும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொள்கிறார்.  இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


அரசுப் பள்ளி சிறுமிகள் சாதனை

கும்பகோணம், மே 30 - கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளை மண்டபத் திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ரியல் வேல்டு ரெக்கார்டு சார்பில் பள்ளி மாணவிகளின் சாதனை  நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார்.  இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும்  1 ஆம் வகுப்பு மாணவிகளான தமிழினியாள் திருக்குறளி லுள்ள 100 தமிழ் வார்த்தைக்கு 1.20 நிமிடத்தில் அதன் பொரு ளையும், மிஸ்பாஷெரீன் எண்களை வைத்து ஆங்கில எழுத்தை கண்டுபிடித்து, 100 வார்த்தைகளை 4.9 நிமி டத்திலும், எகோனா மாற்றப்பட்ட ஆங்கில எழுத்தை வைத்து 100 சரியான வார்த்தையை 3.44 நிமிடத்திலும், அனன்யா 100 ஆங்கில வார்த்தையை வைத்து, அதுக்குரிய  எண்களை 5.47 நிமிடத்திலும், தனுஸ்ஸ்ரீ எண்ணை வைத்து  ஆங்கில எழுத்தை கண்டுபிடித்து 100 வார்த்தைகளை 8.40 நிமிடத்தில் கூறினர். உலக சாதனை படைத்த 5 அரசு பள்ளி மாணவி களுக்கும், பயிற்சியளித்த பள்ளி வகுப்பு ஆசிரியர்  ஆனந்தி ஆகியோருக்கும் கும்பகோணம் அனைவருக்கும்  கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும்  ரியல் வேல்டு ரெக்கார்டு நிறுவனத் தலைவர் செந்தில் ஆகி யோர் உலக சாதனைக்கான சான்றிதழும், நினைவு பரிசும்  வழங்கினார்.


குறைதீர் கூட்டத்தில்  கிராமமே திரண்டு வந்து மனு

திருவாரூர், மே 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருவாரூர் அம்மையப்பன் தென்கால் தெருவை சேர்ந்த  கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.  2014 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி களின்போது அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளை அரசு கையகப்படுத்தியிருக்கிறது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மிகக் குறைவாக இருந்ததால், அந்தத் தொகை யில் வீடு கட்டி குடியேறாத நிலையில் புல எண்.180/2 கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு அமைத்து குடியி ருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டு களாக பலமுறை கோரிக்கை வைத்தும் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சி யர் செய்துத் தர வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.


மாணவர்கள் சேர்க்கை

 தஞ்சாவூர், மே 30-  தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வழி காட்டுதலின்படி, பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவ லர் கு.திராவிடச் செல்வம் தலைமையில், ஆய்வு அலுவ லர்கள் குழு அமைக்கப்பட்டு பட்டுக்கோட்டை கல்வி மாவட் டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் உள்ள நுழைவு நிலை வகுப்பில் மாண வர் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 1,280 மாணவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி மற்றும் விதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப் பட்டது. 


பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூர், மே 30-  தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் அருண் பாண்டியன். இவரது மனைவி திலகவதி (27). இரு தினங்களுக்கு முன்பு, இவர் தனது குழந்தையுடன் ஸ்கூட்டி யில் மருத்துவக் கல்லூரி சாலையில் சென்று கொண்டி ருந்தார். தஞ்சை இந்திரா நகர் 6 ஆவது தெருவில் வந்த  போது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு தனது குழந்தைக்கு பாட்டி லில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். அப்போது பின்தொ டர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர் திலகவதியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு  தப்பிச் சென்றார். இதுகுறித்து திலகவதி தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்நிலையத்தில் புகார் செய்த தன் பேரில், காவல்துறை ஆய்வாளர் பிராங்கிளின் மற்றும்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


அரும்பாக்கம் வீரசோழன்  ஆற்றுப்பால சந்திப்பில் தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, மே 30- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே யுள்ள கொத்தங்குடி ஊராட்சி அரும்பாக்கம் வீரசோழன் ஆற்றுப்பாலம் சாலை சந்திப்பில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழி யாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்ப வர்கள் கடும் சிரமத்துடன் செல்கிற நிலை உள்ளது. மங்கநல்லூர் - பொறையார் - செம்பனார்கோயில் ஆகிய  மூன்று பகுதிகளுக்கு சாலைகள் பிரியும் இடத்தில் இப்பாலம்  உள்ளதால் அதிகளவில் வாகனங்களும், இருசக்கர வாகனங் களும் வந்து செல்கின்றன. மேலும் ஓரிரு கிலோ மீட்டர் தொலை விலேயே புதுச்சேரி மாநில எல்லையில் மதுக்கடைகள் உள்ள தால் மது அருந்தி வருபவர்கள் அதிவேகத்துடன் வாகனங்க ளில் வந்து விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாக உள்ளது.  எனவே பாலம் அருகில் இருபுறமும் தெரு விளக்குகளை அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி  ஒன்றியக் குழு உறுப்பினர் என்.சந்திரமோகன் வலியுறுத்தி யுள்ளார்.


ஏனாதி: பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர், மே 30-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த, ஏனாதி  ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில், 18 மற்றும் 19  ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் ம.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு விழாப் பேருரையாற்றி, மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார். பல்கலைக்கழக தரவரிசைப் பட்டிய லில் இடம் பெற்ற முதுநிலை கணினி அறிவியல் மாணவி ரெ.கலைக்கொடிக்கு கல்லூரியின் சார்பாக பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆய்வியல் நிறைஞர்-16, இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளில் 404 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டன.