திருச்சி, ஜூன் 30- திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முசிறி கிளை பணிமனை முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். செல்வராஜ் வரவேற்று பேசினார். முசிறி ஒன்றியச் செயலாளர் குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பழனிமுத்து, கோவிந்தராஜன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், மாநிலத் துணைச் செயலாளர் சின்னசாமி, ஆகியோர் பேசினர். சண்முகநாதன் நன்றி கூறினார். அனைத்து அரசு அலுவலர்களுக்கும் 31 விழுக்காடு டி ஏ தருவது போல், ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கும் தர வேண்டும் அரசு காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும், 80 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெரும் அலுவலர்களுக்கு உடனே முழுப் பயன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.