தஞ்சாவூர், ஜூலை 6-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் புதிய மேலாண் இயக்குநராக இரா.மோகன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு சேலம், திருநெல்வேலி கோட்டங் களில் மேலாண் இயக்குநராகப் பணி யாற்றியுள்ளார். கும்பகோணத்தில் ஏற்கெனவே மேலாண் இயக்குநராக பணியாற்றிய எஸ்.எஸ்.ராஜ்மோகன் விழுப்புரம் கோட்டத்திற்குப் பணி மாறுதலில் சென்றுவிட்டார்.