districts

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 29 - தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க திருச்சி  புறநகர் மாவட்ட முதல் மாநாடு ஞாயிற்றுக் கிழமை சமயபுரத்தில் உள்ள முத்து ரத்தின திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம் பரம் துவக்கி வைத்தார். சங்க மாநில அமைப் பாளர் சாமி.நடராஜன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் கோவில் நிலங்களில் குடியிருப் போருக்கு நியாயமான வாடகை நிர்ணயம்  செய்ய வேண்டும். பழைய வாடகைதாரர்களுக் கும் நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய  வேண்டும். பழைய பாக்கி என்ற பெயரில் பல  லட்சங்கள் நிர்ணயித்து காலி செய்ய முயற்சிப் பதை கைவிட வேண்டும். குத்தகை பாக்கி களை தானியமாக வசூல் செய்ய வேண்டும்.  அரசாணை 318-ஐ அமல்படுத்த சட்டப்பூர்வ மான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. தலைவராக அழகர், செயலாளராக எஸ். முருகேசன், பொருளாளராக எஸ்.குரு நாதன், துணைத்தலைவராக பிரபாகர், துணை செயலாளராக செல்லதுரை உட்பட 14 பேர் கொண்ட புதிய குழு தேர்வு செய்யப் பட்டது.