திருச்சிராப்பள்ளி, மார்ச் 13 - திருச்சி மாவட்டம் சமய புரம் இருங்களூர் பகுதியில் எஸ்.ஆர்.எம். கல்வி குழு மம் சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சர்வ தேச மகளிர் தினத்தை முன் னிட்டு ‘அக்னி சிறகே’ என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப் பட திரைக்கலைஞர் ரோகிணி பங்கேற்று சிறப்புரையாற்றி னார். விழாவில் என்ஜினீயரிங் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவி களுக்கு ரங்கோலி, நட னப்போட்டி, உபயோக மல்லாத பொருட்களை கொண்டு உபயோகமான பொருட்களை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு திரைக்கலைஞர் ரோ கிணி சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தமிழர் களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது செய்தியாளர் களிடம் ரோகிணி கூறு கையில், “சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் நீட்சிதான் பாலி யல் வன்கொடுமை போன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். கூட்டுக் குடும்பங்கள் விலகி தனிக் குடும்பமாக இருப்பதாலும், குழந்தை களை பெற்றோர்கள் சிறுவய தில் எப்படி வளர்த்தார்களோ அதேபோல் முதுமையிலும் நாம் அவர்களை பார்த்துக் கொண்டால் முதியோர் இல்லங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. சாதி பாகு பாடு காரணமாகத்தான் வன் கொடுமை அதிகரிக்கிறது. இந்நிலை மாற வேண்டுமென் றால் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய புரிதல் வேண்டும்” என்றார். விழாவில் திருச்சி எஸ். ஆர்.எம். மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் மால்முரு கன், இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன், டீன் டாக்டர் ரேவதி மற்றும் மருத்துவ கல்லூரி, செவிலி யர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் பங்கேற்ற னர்.