districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி களத்தில் கிடைத்தது பட்டா; மக்கள் மகிழ்ச்சி

மயிலாடுது2றை, மார்ச் 16-  மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் அருகேயுள்ள அப்பரா சப்புத்தூர் கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணியால் வீடுகளை இழந்த 13 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் போராட் டத்தையடுத்து போராட்டக்களத் திலேயே மாற்று இடம், குடிமனை பட்டா வழங்கப்பட்டது.  விழுப்புரம் முதல் நாகப்பட்டி னம் வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கியும், பல விவசாயிகளை ஏமாற்றியும் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்பு களை அகற்றி சாலை அமைக்கும் பணியை வருவாய்த்துறை துணை யுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  அப்பராசப்புத்தூர் கிராமத்தில் 13 குடியிருப்புகள் நான்குவழிச் சாலையால் முற்றிலுமாக பாதிக்கும்  அபாயம் இருந்தது. இதையடுத்து கிராமமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் வியாழ னன்று குடியிருப்புகளை அகற்றுவ தற்காக அதிகாரிகள் இயந்தி ரங்களுடன், காவல்துறைதுறை பாதுகாப்போடு அப்பராசப்புத்தூர் கிராமத்திற்கு வந்தனர்.  தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், செம்பனார் கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், ஜி. வெண்ணிலா, சி.விஜயகாந்த், மற்றும்  வீ.எம்.சரவணன், கண்ணகி, டி.ஜி.ரவி, மேகநாதன், ஆர்.ரவீந்திரன், காபிரியேல், மயி லாடுதுறை நகர் செயலாளர் ஏ.ஆர் விஜய், சீர்காழி ஒன்றியச் செயலா ளர் அசோகன், அப்பராசப்புத்தூர் கிளைச் செயலாளர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் பாதிக்கப் படும் மக்களுக்கு மாற்று இடம் அதற்குரிய குடிமனை பட்டாக்க ளையும் வழங்கிய பிறகு சாலைப் பணியைத் தொடங்க வேண்டு மென வலியுறுத்தி அதிகாரிகள் மேற்கொள்ளவிருந்த நடவடிக் கையை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தரங்கம்பாடி வட்டாச்சியர் காந்திமதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக மாற்று இடத்தை ஏற்பாடு செய்து காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் லாமேக், பொறையார் ஆய்வாளர் சிங்காரவேலு முன்னி லையில் 13 குடும்பங்களுக்கும் போராட்டக்களத்திலேயே பட்டாக் களை தயார் செய்து வழங்கினர்.  கடந்த 2007-ஆம் ஆண்டு அப்பராசப்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை,எளிய குடும்பங்க ளுக்கு குடிமனை கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய தரங்கம்பாடி வட்டச் செயலாள ரும், தற்போதைய மாவட்டச் செயலாளருமான பி.சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. அப்போது காவல் துறையின்  போராட்டக்காரர்களை தாக்கியதோடு துப்பாக்கிச்சூடும் நடத்தினர். தற்போது வரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.