பெரம்பலூர், ஜன.11 - கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, கோட்ட துணைத் தலைவர் மதியழகன், கோட்ட இணைச் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர். கோட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமரி அனந்தன், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் மாநில அரசே நிர்வகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.