புதுக்கோட்டை, நவ.6 - மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில், பதக்கம் பெற்றவர்கள் மற்றும் தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனை களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா நேரில் அழைத்துப் பாராட்டினார். பளு தூக்குதல் போட்டி களில் பள்ளி பிரிவில் என்.நகுலன் மற்றும் பரணிதரன் தங்கப் பதக்கமும், கல்லூரி பிரிவில் எஸ்.சண்முக பிரியா மற்றும் மேரிசாமினி வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இறகுப் பந்து போட்டியில் கல்லூரி பிரிவில் தன்முகில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சிலம்பம் போட்டியில் பள்ளி பிரிவில் மஹாலட்சுமி மற்றும் தவப்பிரியா வெண்கலப் பதக்கமும், கல்லூரி பிரிவில் ப்ரிதி யங்கரா வெண்கலப் பதக்க மும் வென்றுள்ளனர். வளை கோல் பந்து போட்டியில், பள்ளி பிரிவில் விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் வேங்கடகுள தூய வள னார் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென் றுள்ளனர். குத்துச்சண்டை போட்டிகளில் கல்லூரி பிரி வில் நர்மதா, அகல்யா தேவி, மாலதி, கீர்த்திகா, சரண்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இப்போட்டியில் மொத்த மாக 14 பதக்கங்களை வென்று பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.13,25,000 பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், உத்தரகண்ட் மாநிலம் காசிப்பூரில் கடந்த ஆகஸ்ட் 14-18 தேதிகளில் நடைபெற்ற நீச்சல் போட்டி களில் கமலேஷ்நாத், அகி லேஷ்நாத் மற்றும் சந்தோசிகா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். இவர்கள் மூவரும் எகிப்தில் நடை பெற்ற சர்வதேச அளவி லான மாடர்ன் பென்டதலான் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், கம லேஷ்நாத் இரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கோவாவில் நடைபெற்ற 24 ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் ஈஸ்வரி தங்கப் பதக்கமும், கஜப் பிரியா வெள்ளிப் பதக்க மும் வென்றுள்ளனர். இவர்களை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சி யர் மு.அருணா புதன்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரி வித்தார். மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.