அறந்தாங்கி, மார்ச் 20 - கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவ னங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் அநீதி தீர்ப்பை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் தேசிய கொடி போன்ற ஹிஜாப் அணிந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தவ்ஹித் ஜமாஅத் மாநில பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் கண்டன உரையாற்றினார்.