districts

img

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மலர் கண்காட்சி

அமைச்சர்கள் பங்கேற்பு கோவை, பிப்.8- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் 7 ஆவது மலர் கண்காட்சியினை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செந் தில் பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.  கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் உள்ள தாவரவியல் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 7 ஆவது ஆண்டாக இவ்வாண்டு  மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவை தாவரவி யல் பூங்காவில் இவ்வாண்டு 8 ஆம் தேதியன்று முதல் 12 ஆம் தேதி  வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி  நடைபெறுகிறது. இந்த கண்காட்சி யில் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மலர் கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரோஜா, ஆர்கிட், மல்லிகை, செண் டுமல்லி, சம்மங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி மற்றும் பல் வேறு அரிய வகை மலர்களைக் கொண்டு வானவில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநயம் மிக்க வடிவங்கள் அமைக்கப்பட் டுள்ளது. பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்துள்ளது. இந்த கண் காட்சியினை சனியன்று தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம், மின்சார துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகி யோர் திறந்து வைத்து பார்வை யிட்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் செந் தில் பாலாஜி பேசுகையில், தொழில் துறை, கல்வி, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் தமிழ்நாட்டில் கோவை முதல் இடத்தில் இருக்கிறது. வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை முதல் முறையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10  முதல் 20 ஆண்டுகள் மின் இணைப் புக்காக பதிவு செய்து காத்திருந்த இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மூன்றே ஆண்டுகளில் இலவச  மின் இணைப்பு வழங்கப்பட்டுள் ளது. கோவையில் ஐந்து நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சி யினை அருகாமை மாவட்டத்திலி ருக்கும் மக்களும் நேரில் பார் வையிட்டு சிறப்பிக்க வேண்டும், என்றார்.  தொடர்ந்து, வேளாண்மை உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசுகையில்,  கடந்தாண்டு நடைபெற்ற கண்காட் சியை ஒரு லட்சத்திற்கும் அதிக மான மக்கள் கண்டுகளித்தனர். இந் தாண்டும் அதிகமான மக்கள் வந்து பார்வையிட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு  முழுவதும் 1,106 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணங்கள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை யின்படி, மாணவர்கள் இந்த ஆண்டு பண்ணை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவர்க ளுக்கும் விவசாயத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்து கொள்ளும்  வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விஞ் ஞானிகள் செய்யக்கூடிய ஒவ் வொரு ஆராய்ச்சியும் மக்களுக்கு  பயனளிக்க கூடியவையாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி செய்து கொண்டு வரும் நெல்லை அனைத்து மாநில மக்களும் சாப் பிட வேண்டும். குறைந்த நாட்களில் விளையக்கூடிய நல்ல பலன் தரக் கூடிய தாவர வகைகளை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு வழங்க வேண் டும். பல்கலைக்கழக மற்றும் வேளாண்துறை ஊழியர்கள் அர்ப் பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் வெ.கீதாலட்சுமி, மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபா கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.