மயிலாடுதுறை, ஜன.3 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையின் 14 ஆம் பேராயர் பதவியேற்பு விழா ஜனவரி 14 அன்று நடைபெறவுள் ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் பல நூற்றுக்கணக்கான தேவால யங்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பள்ளிக்கூடங் கள், கல்லூரி, மருத்துவ மனைகள், தொழிற்பயிற்சி பள்ளி, பாலர் பள்ளிகள், மாணவ,மாணவியர் விடுதி கள் என பல நூறு நிறுவனங்க ளுடன் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கு கல்வி சேவையை இலவசமாகவும், மிக குறைந்த கட்டணத்திலும் தமிழ் சுவி சேஷ லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) வழங்கி வரு கிறது. இதன் 14 ஆவது பிஷப் தேர்தல் திருச்சி தரங்கை வாசம் தூய திருத்துவ ஆல யத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப் பட்ட நிர்வாகிகள் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை நீதிபதி (ஓய்வு) பால் வசந்தகுமார், தேர்தல் அதிகாரி ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ரத்தினராஜ், நிதி மற்றும் சொத்து அதிகாரி ஜெயச் சந்திரன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. இத்தேர்தலில் திருச் சபையின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களித்த தில் மறைதிரு முனைவர் அ. கிறிஸ்டியன் சாம்ராஜ், அதிக வாக்குகள் பெற்று 14 ஆம் பேராயராக தேர்வானார்.
ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையின் பேராயருக்கான பட்டாபிஷேகம் எனப்படும் பதவியேற்பு விழா தமிழறி ஞரும், கிறிஸ்தவ மதபோத கருமான சீகன்பால்குவால் 1718 இல் கட்டப்பட்ட புதிய எருசலேம் தேவாலயத்தில் ஜனவரி 14 அன்று, பாரம் பரிய முறையில் நடத்தப்படு வது வழக்கம். இந்நிலையில் ஜன.14 அன்று புதிய பிஷப் பட்டாபி ஷேக விழா நடைபெறவுள் ளது. ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், இத்தாலி உள் ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த லுத்தரன் திருச்சபை பேராயர்கள், பிரதிநிதிகள், வெளிநாட்டவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதி நிதிகள், திருச்சபை மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவையொட்டி தரங் கம்பாடி புதிய எருசலேம் தேவாலயத்தில் விழா ஏற் பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. பேராயராக பதவியேற்க வுள்ள கிறிஸ்டியான் சாம் ராஜ், சுனாமி பேரழிவால் பெற்றோர்களையும், உறவு களையும் இழந்து பாதிக்கப் பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர் களை தனது சொந்த செல வில் படிக்க வைத்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மீனவ சமுதாய மக் கள் நலன் சார்ந்த பணிகள் பலவற்றை மேற்கொண் டார். இதுமட்டுமின்றி, தரங் கம்பாடியில் உள்ள சீகன் பால்கு மாணவர் விடுதிக்கு ஜெர்மனி நாட்டு நிதியுதவி யில் சுமார் ரூ.4 கோடி செல வில், ஜெர்மனி கட்டிடக் கலையிலேயே புதிய கட்டி டம் கட்டி, பல்வேறு பகுதி களை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்கி கல்வி பயில காரணமாய் விளங்கி யவர் என்பது குறிப்பிடத் தக்கது.