districts

img

கல்விக்கான நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.18-  தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை வழங்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவர் தாரணி பிரியா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர். வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி, கிளைச் செயலாளர் தனுஷ் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டாட்சிக்கு எதிராகவும், பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை சிதைக்கும் வகையிலும் உள்ள யுஜிசியின் அறிக்கையைக் கண்டித்தும், துணை வேந்தர்கள் நியமன முறையைக் கண்டித்தும், தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியைத் தர மறுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டிதும், ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.