districts

img

நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய மாணவர் சிகிச்சையில்...

திருச்சிராப்பள்ளி, செப்.6 - தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த  விபத்தில் சிக்கிய மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இச்சாலையில் சிக்னல் மற்றும் போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மிகவும் அதிக மாக விபத்து நடக்கக் கூடிய சாலை யாக இருப்பது பால் பண்ணை முதல் தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலை.  திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சா லையாக சுமார் 50 கிலோமீட்டர் தொலை விற்கு இந்த நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை யானது, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி யாகவும், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் இருக்கக் கூடிய ஒரு பகுதியில், பழைய பால் பண்ணை முதல்  தஞ்சாவூர் வரை செல்லும் நெடுஞ்சா லையாக அமைந்துள்ளது. நெடுஞ்சா லைத் துறை இந்தச் சாலையை அமைக்கும்போது சர்வீஸ் சாலை அமைக்காமல்  அலட்சியமாக இருந்த தால், தினமும் விபத்துகள் ஏற்படு கின்றன. இந்நிலையில், காட்டூர் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய கல்லூரி மாண வர் ஒருவர், இரு தினங்களுக்கு முன்பு  இந்த நெடுஞ்சாலையை கடக்க முயன் றார். அப்போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி  உயிருக்கு ஆபத்தான நிலையில் தனி யார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  கல்லூரி முன்பு பேருந்து நிறுத்தம், சிக்னல் அமைக்க வேண்டும். மாண வர்கள் கல்லூரிக்கு வந்து போகும் நேரங்களில், போக்குவரத்து காவலரை  நியமிக்க வேண்டும் என இந்திய மாண வர் சங்கம் சார்பில் பலமுறை அரசு அதி காரியிடம் மனு கொடுத்தும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தற்போது கல்லூரி மாணவர் ஒரு வர் விபத்தில் சிக்கி உயிருக்கு போரா டிக் கொண்டிருக்கிறார். அந்த மாணவரின் மருத்துவச் செல வினை தமிழக அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.  போக்குவரத்து சிக்னல்  வசதி மற்றும் கல்லூரி நேரங்களில் அவ்விடத்திற்கு ஒரு போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் எனக் கோரி, இந்திய மாணவர் சங்க யூடிசி  கல்லூரிக் கிளை சார்பில் 500-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாணவர் சங்க கல்லூரி கிளைத் தலைவர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் சூர்யா, மாவட்டச் செயலாளர் ஜி.கே. மோகன், கிளைச் செயலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.