திருப்பூர், பிப். 8 - காங்கேயம் வட்டத்தில் தனியார் மஹாலில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழாவினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டனர். தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் தின் கீழ் மாவட்ட அளவிலான இந்த சிறுதானிய சிறப்பு திரு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நம் உணவு முறை முன்னோர்கள் உணவு முறைக்கு மாறுபட்டு உள்ளது. அரிசி உற்பத்தி பெருகி, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, இராகி, தினை, வரகு, குதிரைவாலி, சாமை போன்றவற்றின் உற்பத்தி குறைந்து விட்டது. வைட்டமின்கள், தாது உப் புக்கள் நம் உடலுக்கு கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துமிக்க தானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு உற்பத்தியை பெருக்க வும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தரிசு நிலங்களை மேம்படுத்தி சிறு தானிய உற்பத் தியை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சாகுபடி மேம்பாட்டிற்கான சிறு தானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், அங் கக உரம் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்க ளான சோளம் 37ஆயிரம் ஹெக்டேரிலும், கம்பு 200 ஹெக்டே ரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பிரதான பயிரான சோளம் பெரும்பாலும் தீவனப் பயிராக சாகுபடி செய்யப்படு கிறது. இதை தட்டும், தானியமும் கொடுக்கக்கூடிய பயிராக மாற்ற வேளாண்துறை முனைப்புடன் செயல்படுகிறது என்றார். மேலும் இந்நிகழ்வில் ஆடாதொடா, நொச்சி நாற்றுகள், பேட்டரி தெளிப்பான் உள்பட வேளாண் உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர். தொடர்புடைய அலுவலர்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.