districts

அறுவடை இயந்திரங்களுக்கு கட்டணம் நிர்ணயம் கூடுதலாக வசூலித்தால் புகார் அளிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, பிப்.2- நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கை யில், திருச்சி மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடை பெற்று வரும் நிலையில், தனியார் நெல்  அறுவடை இயந்திரங்களின் வாடகை முறைப் படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக நடை பெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவின்படி, பெல்ட் வகை அறுவடை இயந்தி ரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.2400  எனவும், டயர் வகை அறுவடை இயந்திரங்க ளுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.1600  எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி விவசாயிகளுக்கு வழங்கும் ரசீதில் அறுவடை இயந்திரம் ஓடிய நேரம் மற்றும் வாடகைத் தொகையை குறிப்பிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக, விவசாயிகளிடமிருந்து வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ (1077) அல்லது வேளாண் பொறியியல் பிரிவு செயற்பொறியாளருக்கு 8072296624, உதவி செயற்பொறியாளர்கள் 9443675359 (திருச்சி) 9842435242  (லால்குடி), 9865547628 (முசிறி) என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.