districts

img

மூத்த தோழர் சேதுஅம்மாள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நிதி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி பொன்மலை பகுதியில் நீண்ட கால  உறுப்பினராகவும்  மாதர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டும் கடந்த 70  ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வர் தோழர் சேதுஅம்மாள். தோழர் பாப்பா  உமாநாத்துடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களில் பங்கேற்று மாதர் சங்க பணிகளில் தொடர்ந்து பங்காற்றி யவர்.  தோழர் அனந்தநம்பியார் மற்றும் மாதர்  சங்க தலைவர்களுடன் இணைந்து பொன் மலை பகுதியில் மாதர் சங்கத்தை கட்ட மைக்க பாடுபட்டவர். கடந்த 2 வருடங்க ளுக்கு முன்பு வரை கட்சி மற்றும் மாதர் சங்க  பணியில் ஈடுபட்டு வந்தார். உடல்நலக்குறை வின் காரணமாக தற்போது கட்சிப் பணியில்  ஈடுபட முடியவில்லை. இந்நிலையில் பொன்மலை சங்கத்திட லில் உள்ள டிஆர்இயு அலுவலகத்தில் கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தோழர் சேதுஅம்மாள் தன்னுடைய சிறிய சேமிப்பில் இருந்து கட்சிக்கு ரூ.1 லட்சம், டிஆர்இயு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம். தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்தை பராமரிக்க ரூ.50 ஆயிரம் என ரூ.2 லட்சத் திற்கான காசோலையை கட்சியின் மத்தியக்  கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதரிடம் வழங்கினார்.