கரூர், ஜூன் 1- சிஐடியு அமைப்பு தினத்தையொட்டி அகில இந்திய நிர்வாக குழு கூட்ட தீர்மானங் கள் விளக்க பேரவை சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் ப.சரவணன், மாவட்ட பொருளாளர் ராஜீவ்காந்தி, மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராஜேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். கட்டுமான சங்க நூறு உறுப்பினர் சேர்ப்பு சந்தா தொகை, நன்கொடையாக ரூ.1900 சிஐடியு செய்தி மாத இதழுக்கு 10 ஆண்டு சந்தாவுக்கான தொகையை கட்டுமான சங்க மாவட்ட உதவி செயலாளர் எஸ்.துரைச்சாமி வழங்கினார். கட்டுமான சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராஜேஸ்வரி, சிஐடியு அயனா வரம் நிர்மல் பள்ளி நிதியாக ரூபாய் ஆயிரம் வழங்கினார்.