districts

எம்.சின்னதுரை எம்எல்ஏ., முயற்சியால் சுய உதவிக் குழுவினருக்கு கல் உடைக்க அனுமதி

புதுக்கோட்டை, ஜன.20 - கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் முயற்சி யால் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் சுய உதவிக் குழுவினருக்கு கல் உடைக்கும் தொழில் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தா மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே கல் உடைப்பதற்கான அனுமதியை  அரசு அளித்து வந்தது. சுய உதவிக் குழு வினருக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. தங்களுக்கும் கல் உடைப்பதற்கான அனு மதியை அளிக்க வேண்டும் என அப்பகுதி  சுய உதவிக் குழுவினர் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். ஆனால், அனுமதி கிடைக்க வில்லை. இதுகுறித்து தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரான எம்.சின்னதுரையிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் என்.சின்னதுரை, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு சுய உதவிக்குழுவினருக்கு கல் உடைக்கும் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நார்த்தாமலையில் உள்ள 5 சுய உதவிக்குழுக்களுக்கு கல் உடைக்கும் தொழில் செய்ய மாவட்ட ஆட்சி யர் அனுமதி அளித்தார். தொடர்ந்து, மேற்கண்ட சுய உதவிக்குழுவினர் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னதுரையை அவரது அலுவல கத்தில் சந்தித்து பயனாடை அணிவித்து நன்றி  தெரிவித்தனர்.