திருச்சிராப்பள்ளி, பிப்.12 - திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக் குழு சார்பில் வெள்ளியன்று தாராநல்லூர் கீரைக்கடை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை வகித்தார். திமுக சார்பில் 16 ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் எம்.மதிவாணன், 18 ஆவது வார்டில் போட்டியிடும் டி.சண்முக பிரியா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 17 ஆவது வார்டில் போட்டியி டும் வேட்பாளர் ந.பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்தி சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா ஆகியோர் பேசினர். கூட்டத் தில் சுமைப் பணி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.