districts

img

அறிவியல் திருவிழா

ஈரோடு, பிப்.8- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து வானவில் மன்றத்தின் சார்பாக சிவகிரியில் கிராம அறி வியல் திருவிழா நடைபெற்றது. ஈரோடு, சிவகிரி மகாமாரியம்மன் கோவில் திருமண  மண்டபத்தில் சனியன்று கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் பரிசோதனை செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது. மந்திரமா தந்திரமா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு சிவகிரி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் யசோதா தலைமை வகித்தார். வானவில் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி கார்த்தி வரவேற் றார். பள்ளி மாணவ, மாணவியர்கள் மறுறம் பெற்றோர் கள் திரளாக பங்கேற்றனர்.