திருச்சிராப்பள்ளி, ஜூன் 22 - திருச்சி புறநகர் மாவட் டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சி பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ள பாசன வாய்க்காலில் மணல் அள்ளுவதற்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத் தப்படுகின்றன. இப்பகு தியில் கழிப்பிடம், குடிநீர், குளியல், தங்கும் இடம் ஆகிய எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், லாரி பணியாளர்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளையும், வயல்வெளிகளையும் பயன் படுத்தி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களை அச்சுறுத் துகிறது. திருச்சி - சென்னை மற்றும் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் மணல் லாரிகள் நிறுத்துவதால் பெரும் விபத்து மற்றும் சீர்கேடுகள் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே பாசன வாய்க்காலை அழித்து பள்ளிக்கூட சாலையை மறித்து சென்னை மற்றும் சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலைகளில் லாரிகளை நிறுத்த தடை விதிக்க வேண்டும். பனமங்கலத்தில் நிறுத்தப்பட்டுள்ள மணல் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் கூத்தூர் ஊராட்சி பொது மக்கள் செவ்வாயன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சந்திரன், பன்னீர்செல் வம், ஒன்றியச் செயலாளர் கனகராஜ், கிளைச் செய லாளர் சுப்ரமணி ஆகியோர் தலைமையில் கூத்தூர் ஊராட்சி பொதுமக்கள் பேர ணியாக சென்று பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மண்கண்டனி டம் மனு கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்ச நல்லூர் வருவாய்த்துறை அலுவலர், தேசிய நெடுஞ் சாலையில் நின்றிருந்த லாரிகளை அப்புறப்படுத்தி னர். மேலும் அப்பகுதியில் உடனடியாக சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர்.