districts

தரங்கம்பாடி பகுதிகளில் கிராமப்புற சாலைகளை சீரமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை, ஜூலை 11 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றி 23 ஆவது மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள காட்டுச்சேரியில் ஞாயிறன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பவுல் சத்தியராஜ் தலைமை வகித்தார். சங்க கொடியினை ஒன்றியப் பொருளாளர் சாமித்துரை ஏற்றி வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பி னர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்டக் குழு உறுப்பினர் கார்த்திக் கேசன் வரவேற்றார். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.அறிவழகன் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார்.  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.கோவிந்த சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஆர். ராணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசி னர். அரசியல் ஸ்தாபன அறிக்கையை ஒன்றி யச் செயலாளர் ஐயப்பன் வாசித்தார்.  பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவராக பவுல் சத்தியராஜ், செயலாளராக ஐயப்பன், பொருளாளராக கார்த்திகேசன், துணைத் தலைவர்களாக  பி.எஸ்.கோஷ்மின், ராமச் சந்திரன், துணைச் செயலாளராக எம்.பிரபு, ஆனந்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய  நிர்வாகிகளை அறிவித்து மாவட்டச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றி னார்.  தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தரங்கம்பாடி - மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க வேண்டும். நடந்து செல்லக் கூட முடியாத நிலையிலுள்ள கிராமப்புற  சாலைகளை சீரமைக்க வேண்டும். ஒன்றியத் தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும்  ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி மேம்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர் பிரபு நன்றி கூறினார்.