districts

img

பேராவூரணி தொகுதியில் சாலைப் பணிகள் தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 8-

     தமிழக முதலமைச்சரின் கிராமச் சாலை கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தென்னங் குடி ஊராட்சியில், தென்னங்குடி பள்ளிக் கூடம் வழியாக செல்லும் பஞ்சு மில் இணைப்பு சாலை  ரூ.31 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படுகிறது.  

    இதேபோல், மடத்திக்காடு ஊராட்சியில் ரூ.39.95 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேராவூரணி தெற்கு ஒன்றி யச் செயலாளர் க.அன்பழகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட நெச வாளர் அமைப்பாளர் பன்னீர் செல்வம், மாவட்ட தொண்டர்  அணி அமைப்பாளர் மணி வண்ணன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத்,  மாவட்டக் கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர்கள் ராஜலட்சுமி ராஜ்குமார், அண்ணாதுரை, ஊராட்சி மன்றத்  தலைவர்கள் குணதா சரவணன் (தென்னங் குடி), சுதாசினி சுப்பையன் (மடத்திக்காடு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.