districts

img

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவிடம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, நவ.20 - சிஐடியு திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி சந்திரன், மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஆண்டனி சுரேஷ்,  மாவட்டத் துணைத் தலைவர் பீர் முகமது,  சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவர் சீனி வாசன், புதுக்கோட்டை மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ரத்தினவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மணி மாறன் ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை.வைகோவிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அம்மனுவில், “கடந்த 2014 முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் பரிந்துரை என்ற பெயரில் 1988 மோட்டார் வாகன சட்டத்தை சாலை பாதுகாப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ய முற்பட்டது. பல ஆலோசனைகள் வழங்கியும், போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிய அரசு எதையும் ஏற்க வில்லை. ஆனால், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. மோட்டார் வாகனத் தொழி லும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே கூறிய நிலையில், இன்று ஒவ்வொரு சட்டமாக தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே நாடு முழுவதும் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள், மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நாடா ளுமன்றத்தில் விவாதித்து புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019-ஐ வாபஸ் பெற வேண்டும். அந்த முறையில், இக்கோரிக்கைகள் அடங்கிய மனு குறித்து தாங்கள் பேச வேண்டும். மேலும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் சார்பாக,  தங்கள் வாயிலாக இம்மனுவை பிரதமர் அலு வலகத்தில் சமர்ப்பிக்குமாறு சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்” என கூறியிருந்தனர்.