சீர்காழி, ஜன. 27 கொள்ளிடம் பகுதியில் பத்தாண்டுக ளுக்குப் பிறகு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே உள்ள தைக்கால் ஜின்னா தெருவிற்கான சாலை மிகவும் மோசமாக வும் குண்டும் குழியுமாகவும் இருந்து வந்தது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஜின்னா தெரு சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதேபோல் கொள்ளி டம் அருகே உள்ள அனுமந்தபுரம் அம்பேத் கர்தெரு சாலை கடந்த பத்தாண்டுகளாக மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து இரண்டு கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்று கொள்ளிடம் ஒன்றியகுழு தலைவர் ஜெய பிரகாஷ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் இருபத்தி நான்காவது மானி யக்குழு நிதியிலிருந்து சாலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை மேம் படுத்தும் பணி புதனன்று நடைபெற்றது.