முசிறி, மார்ச் 5 - திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி மாணிக்கநகர், முருகு விநாயகர் நகர் குடியிருப்பு பகுதி யின் மையத்தில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் செவ்வாயன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் டன் கணக்கில் தேங்கியிருந்த கழிவுகளில் உள்புறம் கசிவு ஏற்பட்டு கொண்டே இருந்து வருகிறது. மேலும் அதிகப்படியான தண்ணீரை கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் இருக்க சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத் துறையினர் நக ராட்சி ஊழியர்கள் முயற்சி மேற் கொண்டனர். இப்பகுதி குடியிருப்புவாசி கள் இதுகுறித்து கூறுகையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் இருக்கும் இடத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மையை ஊருக்கு வெளிப்புறம் மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். டன் கணக்கில் தேங்கியுள்ள குப்பை களில் இருந்து வரும் துர்நாற்றம் இப்பகுதி மக்களுக்கு பல நோய்த்தொற்றுகளை ஏற்ப டுத்துகிறது என்றனர்.